மூன்று தலைமுறை தாண்டி .... இன்னொரு குழந்தையாய் !

அருவிச் சாரலின்
ஒரு துளி தெறித்ததோ !
அன்பின் பதிவு சிலிர்க்க வைத்ததோ !
பிஞ்சு இதழ் பட்டவுடன்
பிரவாகம் பொங்கி கண்கள் நனைந்ததோ !
மெய்மறந்து , கரைந்த கணம்
பிறந்தீரோ மீண்டும் இப்புவியில் இருவருமே !
தீர்க்கமான பார்வை - பார்க்கத்
தீராத பரவசம்
பூவின் புத்துணர்வு
விரல் பிடித்து அழைத்துப் போகும்
பாட்டியை - மூன்று தலைமுறை தாண்டி
இன்னொரு குழந்தையாய்
தங்கமே ! வேறென்ன
உன் பாட்டிக்கு நீ கொடுக்க
வாழ்க! நீ பல்லாண்டு !
( நெய்வேலி ச . ப . சாந்தி கவிதை )

அருவிச் சாரலின்
ஒரு துளி தெறித்ததோ !
அன்பின் பதிவு சிலிர்க்க வைத்ததோ !
பிஞ்சு இதழ் பட்டவுடன்
பிரவாகம் பொங்கி கண்கள் நனைந்ததோ !
மெய்மறந்து , கரைந்த கணம்
பிறந்தீரோ மீண்டும் இப்புவியில் இருவருமே !
தீர்க்கமான பார்வை - பார்க்கத்
தீராத பரவசம்
பூவின் புத்துணர்வு
விரல் பிடித்து அழைத்துப் போகும்
பாட்டியை - மூன்று தலைமுறை தாண்டி
இன்னொரு குழந்தையாய்
தங்கமே ! வேறென்ன
உன் பாட்டிக்கு நீ கொடுக்க
வாழ்க! நீ பல்லாண்டு !
( நெய்வேலி ச . ப . சாந்தி கவிதை )